போப் பிரான்சிஸ் தவறி விழுந்து கையில் காயம்
ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப் பிரான்சிஸ் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
ரோம்,
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது போப் பிரான்சிஸ் தவறி விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப்பாண்டவர் தவறி விழுந்து காயமடைந்திருப்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story