இந்தியா உள்பட பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100 சதவீத வரி - டிரம்ப் தகவல்
அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தை பயன்படுத்த பிரிக்ஸ் அமைப்பு ஆலோசித்தது.
வாஷிங்டன்,
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட அமைப்பு பிரிக்ஸ் ஆகும். உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அமெரிக்க டாலரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலக நிதிசார் அமைப்பில் பல ஆண்டுகளாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக டாலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு பணத்தின் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கி வருகின்றன.
இதற்கிடையே பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கபடலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தை பயன்படுத்த பிரிக்ஸ் அமைப்பு ஆலோசித்தது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.