இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 12:32 PM IST
புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 12:31 PM IST
அதிமுக ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து கிடக்கின்றன அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10 Dec 2025 12:29 PM IST
தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக.. கியூ.ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.
- 10 Dec 2025 12:28 PM IST
2025-ம் ஆண்டின் உலக அழகான பெண்கள் பட்டியல் - இந்திய நடிகைக்கு 5வது இடம்
2025-ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை பிரபல நிறுவனம் வெளியிட்டது.
- 10 Dec 2025 12:08 PM IST
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி
மதவாத அமைப்பினருக்கு சாதகமாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
- 10 Dec 2025 12:07 PM IST
வடதமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும்: தமிழ்நாடு வெதர்மேன்
வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
- 10 Dec 2025 12:06 PM IST
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
- 10 Dec 2025 11:42 AM IST
சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து
9-வது நாளாக இன்று சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 புறப்பாடு, 14 வருகை விமானங்கள் என மொத்தம் 28 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 11:32 AM IST
அம்மாவின் ஆன்மா இதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவத்திலே தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாக வளர்மதி தெரிவித்தார்.
















