பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
"பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் நத்தை போல வாகனங்கள் நகர்ந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கித் தவித்து வருகின்றன. இதனிடையே சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழக இன்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story