சென்னை சங்கமம் நிகழ்ச்சி - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு


சென்னை சங்கமம் நிகழ்ச்சி -  முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jan 2025 8:38 PM IST (Updated: 17 Jan 2025 9:32 PM IST)
t-max-icont-min-icon

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய உள்ளது

சென்னை,

தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்றைய 'சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் . கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.


Next Story