பள்ளியில் வைத்தே... கையும் களவுமாக சிக்கிய பள்ளி முதல்வர், ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளி வளாகத்திற்குள் பள்ளி முதல்வரும், ஆசிரியையும் தகாத செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தோர்கார்,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பள்ளி முதல்வரும், ஆசிரியையும் தகாத செயல்களில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள சலேரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது அலுவலகத்திற்குள் வைத்து பள்ளி முதல்வரும், ஆசிரியையும் அநாகரீகமான செயலில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இருவரும் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா கூறும்போது, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பள்ளி வளாகத்திற்குள் பள்ளி முதல்வரும், ஆசிரியையும் தகாத செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.