நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்


Police release new photo of man who stabbed actor Saif Ali Khan
x

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மும்பை,

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான். கடந்த புதன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சயிப் அலிகானை குடும்பத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சயிப் அலிகானின் உடலில் 6 இடங்களில் ஏற்பட்ட கத்தி குத்து காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார். இந்த விவகாரத்தில் தச்சு தொழிலாளி ஒருவரை பிடித்து நேற்று போலீசார் விசாரித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் இதற்காக 30 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் கொள்ளையனின் காட்சிகள் பதிவாகி இருந்திருக்கிறது. அதனை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.


Next Story