மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை,
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
Live Updates
- 23 Nov 2024 9:49 AM IST
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.
இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் காலை 9.50 நிலவரப்படி பிரியங்கா காந்தி 80,464 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
- 23 Nov 2024 9:39 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 9.40 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 162
காங்கிரஸ் கூட்டணி - 97
பிற கட்சிகள் - 7
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 39
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 37
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 68,917
சி.பி.ஐ - 20,678
பா.ஜனதா - 11,235
பிற கட்சிகள் - 121
- 23 Nov 2024 9:14 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 9 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 115
காங்கிரஸ் கூட்டணி - 83
பிற கட்சிகள் - 7
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 31
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 41
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 41,770
சி.பி.ஐ - 3,094
பா.ஜனதா - 1,556
பிற கட்சிகள் - 132
- 23 Nov 2024 8:52 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: இருமாநிலங்களிலும் பா.ஜனதா முன்னிலை
மராட்டியம், ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மராட்டியம் (288 தொகுதிகள்)
ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி: 90
காங்கிரஸ் கூட்டணி - 54
பிற கட்சிகள் - 9
ஜார்கண்ட் (81 தொகுதிகள்)
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 15
பிற கட்சிகள் - 0
- 23 Nov 2024 8:41 AM IST
வயநாடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.
இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.
முன்னிலை நிலவரம்
காங்கிரஸ் - 13,800
சி.பி.ஐ - 395
பா.ஜனதா - 255
பிற கட்சிகள் - 34
- 23 Nov 2024 8:27 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க கூட்டணி முன்னிலை
மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மராட்டியம்
ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி: 36
காங்கிரஸ் கூட்டணி - 6
பிற கட்சிகள் - 1
ஜார்கண்ட்
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 13
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 6
பிற கட்சிகள் - 0
- 23 Nov 2024 8:17 AM IST
மராட்டியம், ஜார்கண்ட் தேர்தல்: யாருக்கு மகுடம்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
* மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
* கேரளாவில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
* மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
- 23 Nov 2024 8:07 AM IST
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதேபோல், ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது.
ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மராட்டிய, ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.
வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 13 மாநிலங்களுக்கு உள்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.