எல்லை சாலைகள் அமைப்பில் வேலை: 10ம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்


எல்லை சாலைகள் அமைப்பில் வேலை: 10ம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்
x

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஆர்ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் (பி.ஆர்.ஓ) காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விவரங்களை இங்கு காணலாம்.

பி.ஆர்.ஓ-வில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஆர்ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்:411

பணி விவரம்:

சமையலர் (ஆண்) - 153 மேஸ்திரி - 172 இரும்பு கொல்லர் - 75 மெஸ் வெயிட்டர் - 11

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மேஸ்திரி பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கட்டிட கட்டுமானம் பிரிவில் தொழில்துறை பயிற்சிக்கான (Industrial Training) சான்றிதழ் உள்ளிட்டவை அவசியம்.

வயது வரம்பு: குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள் அதிக பட்ச வயது 25 ஆண்டுகள்

வயது தளர்வு:

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

பொதுப்பிரிவு(GEN) மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்

விண்ணப்பிப்பது எப்படி: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்க : https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ ஆன்லைன் கட்டண இணைப்பு : https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=1232156

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2024

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://marvels.bro.gov.in/Download/Recruitment_Activities_Against_Advt_No01_2025.pdf

மேலும் விவரங்களுக்கு


Next Story