பெண்களுக்கான வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு சித்த மருத்துவ தீர்வுகள்


பெண்களுக்கான வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு சித்த மருத்துவ தீர்வுகள்
x
தினத்தந்தி 18 Jan 2025 6:00 AM IST (Updated: 18 Jan 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

திரிபலா சூரணம் 1 கிராம், படிகார பற்பம் 100 மிகி, சிலாசத்து பற்பம் 100 மிகி இவற்றை காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிடலாம்.

இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும்.இக்கசிவில் லேக்டிக் அமிலம் இருப்பதால் பிறப்புறுப்பை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. இக்கசிவினால் மகளிர்க்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்ற குறிகுணங்களும் சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்நிலைகளை காட்டுவதாகும்.

உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினைமுட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்:

1. கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases)

2. சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல் .

3. உடலுறவின் மூலம் பரவும் நோய் நிலைகள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea)

4. பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்று (Bacterial vaginosis)

5. பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் ( Candidiasis, Trichomonas vaginalis)

6. கருப்பை கழுத்து தாபிதம் (Cervicitis)

7. நெடுநாட்களாக கருத் தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது.

8. கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer)

போன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

1. கீழாநெல்லி சூரணம் 1-2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.

2. வெண்பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, அடித்து குடிக்க வேண்டும்.

3. ஓரிதழ் தாமரை சூரணம்-1கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்.

4. திரிபலா சூரணம் -1 கிராம்,படிகார பற்பம் -100 மிகி, சிலாசத்து பற்பம் -100 மிகி ஆகியவற்றை காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

5. வெண்பூசணி லேகியம் -1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

6. படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்.

7. திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும்.(Sitz Bath).


Next Story