ஸ்ரீலீலா நடித்த 'ராபின்ஹுட்'படத்தின் ரிலீஸ் எப்போது? - வெளியான முக்கிய தகவல்


Is Nithiin’s ‘Robinhood’ seeking a summer date?
x

இப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிதின் கதாநாயகனாக நடித்த இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ராபின்ஹுட் திட்டமிட்டபடி அன்று வெளியாகாது என்று படக்குழு தெரிவித்தது. அதோடு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், ராபின்ஹுட் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் கோடை விடுமுறையை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story