'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 17 Jan 2025 6:02 PM IST (Updated: 17 Jan 2025 6:07 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியாகி வைரலானது.

'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருவதாலும் விடாமுயற்சி படத்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாலும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அறிவித்த தேதியில் மாற்றம் வரும் என சொல்லப்பட்டது. இரண்டு திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.


Next Story