வார ராசிபலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை


Weekly Rasi Palan - 10.11.2024 to 16.11.2024
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

சிறிய விஷயங்களுக்கு கூட பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில்துறையினர் மனதில் வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்தும் சூழல் உருவாகும். வியாபாரிகள் திடீர் பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் பல சிரமங்களை சந்தித்தபின் ஆதாயம் அடைவர். ஷேர்மார்க்கெட் பிரிவினர் ரசாயனம் மற்றும் பொறியியல் நிறுவன பங்குகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கலைத்துறையினர் நல்லவாய்ப்புகளை பெற்றுதங்கள் திறமையை காட்டுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்களை பெறுவார்கள். அலைச்சல் காரணமாக உடல்சோர்வு மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டுவிலகும்.

ரிஷபம்

எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு காலகாலத்தில் செய்துமுடிக்க வேண்டும். குடும்பத்தில் செலவுகள் கூடுதலாக ஆவதால் அது குறித்தவாக்கு வாதங்கள் ஏற்பட்டுவிலகும். தொழில்துறையினர் சரியான முறையில் உற்பத்தி நடப்பதை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். வியாபாரிகள் புதியகிளை தொடங்கும் எண்ணத்தை சற்று தள்ளிவைக்கவேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பல்வேறு பொறுப்புகள் வந்துசேரும். ரியல்எஸ்டேட் துறையினர் தற்போது நடந்து வரும் திட்டங்களை கவனமாக பார்வையிட வேண்டும்.ஷேர்மார்க்கெட் பிரிவினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைதுறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு நிர்வாகத்தில் மதிப்பு பெறுவார்கள். சிறுநீர்பாதைதொற்று, வயிற்றுவலி ஆகியவை ஏற்பட்டுதக்க மருத்துவ சிகிச்சையால் குணமடையும்.

மிதுனம்

அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ற ஆதாயம் உண்டு. குடும்பத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். தொழில்துறையினர் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் எல்லா விஷயங்களையும் தாங்களாகவே நேரடியாக கவனிக்கவேண்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் பெறுவதில் தடைகள் ஏற்படும். ரியல்எஸ்டேட் துறையினர்புதிய திட்டங்களை தொடங்குவதை சற்று தள்ளிவைக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் தங்கநகை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் சிரமங்களை பார்க்காமல் செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்கும். மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய சந்தர்ப்பங்களைபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம். அலைச்சல் காரணமாக உடலும் ,மனமும் சோர்வடையும்.

கடகம்

பல்வேறு அலைச்சல்களுக்குப்பிறகு காரிய சித்தி ஏற்படும். பழையகடன்கள் அடைந்து மனதில் நிம்மதி ஏற்படும். தொழில்துறையினர் அரசாங்கவிஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும். வியாபாரிகள் நிர்வாக விஷயங்களில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தள்ளிவைப்பதோடு, நடைபெறும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் எந்திர நிறுவனங்கள், ஆபரணதயாரிப்பு நிறுவனங்கள் பங்குகளில் லாபம் அடையலாம். கலைத்துறையினர் புதிய நபர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது கவனமாக இருக்கவேண்டும். மீடியாதுறையில் பணியாற்றுபவர்கள் நேரம் காலம் பாராமல் கடமையில் கவனமாக செயல்பட வேண்டும். காலில் மூட்டுவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும்.

சிம்மம்

புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு பல பிரச்சினைகளை சுலபமாக தீர்ப்பீர்கள்.குடும்பத்தில் பொருளாதார ரீதியாக மனத்தாங்கல் ஏற்பட்டு படிப்படியாக விலகும். தொழில்துறையினர் பழைய கடன்களை தீர்ப்பதில் முனைப்போடு இருக்கவேண்டும். வியாபாரிகள் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கவேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து சமாளிக்க வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவை மேற்கொள்ளக்கூடாது. ஷேர்மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் மின்சார நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைத்துறையினர் தங்களுடைய பெயரை நிலைநாட்ட கடுமையாக உழைக்கவேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் தங்கள்மேல் அதிகாரிகளால்மன உளைச்சல் அடைவார்கள். இதய பாதிப்பு உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

கன்னி

குழந்தைகள் மற்றும் உடல்நலம் ஆகிய விஷயங்களில் பாதிப்பு ஏற்பட்டுவிலகும். குடும்பத்தில் சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றங்களை செயல்படுத்தலாம். வியாபாரிகள் பல சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக அதை தீர்ப்பர். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். ரியல்எஸ்டேட் துறையினர் சற்று தாமதம் ஆனாலும் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள்.ரியல் எஸ்டேட் பிரிவினர் புதிய பங்குதாரர்களோடு வேறு திட்டங்களை தொடங்குவார்கள். கலைத்துறையினர் புதிய தொடர்புகளால் நல்ல வாய்ப்புகள் பெறுவார்கள். மீடியாவில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளைப்பெற்று திறமையை வெளிப்படுத்துவர். வயிறுமற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும்.

துலாம்

குடும்ப உறவினர்களிடையே சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்பட்டு அகலும். வீடு, மனை, வண்டி, வாகனங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். கடன்வாங்கவேண்டி இருந்தால் அளவோடு வாங்க வேண்டும். தொழில்துறையினர் சிக்கல்களை சந்தித்தாலும் நல்ல விதமாக அதில் இருந்து விடுபட்டு லாபம் அடைவார்கள். வியாபாரிகள் சிறிய விஷயங்களில் கூட கவனமாக இருந்து அவற்றை சரி செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் மிக நிதானமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. ஷேர்மார்க்கெட் பிரிவினர் ஆபரணங்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் லாபம் பெறலாம். கலைதுறையினர் புதிய சிந்தனைகளோடு களமிறங்கி வெற்றி பெறவேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் புதிய சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து விடுபடுவர்.வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

குடும்பத்தில் புதிய நபர்களால் குழப்பம் ஏற்பட்டு விலகும். சொந்தபந்தங்களுக்கு கடன் தந்து உறவை நீட்டிக்க வேண்டிய சூழல் உருவாகும்.தொழில் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள்.வியாபாரிகள் வர்த்தக கூட்டாளிகள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் யாரையும் நம்பாமல் தங்கள் பணிகளைதாங்களே செய்வது அவசியம். ரியல்எஸ்டேட் துறையினர் பணியிடங்களில் ஏற்படும் சிறிய விஷயத்தை கூட கவனமாக கையாள வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் நடைபெறும் பணிகளை நேரடியாக சென்று கவனிக்க வேண்டும். கலைத்துறையினர் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும். மீடியாவில் பணியாற்றுபவர்கள் உடல்நலம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். மனஉளைச்சல் காரணமாக தலை சுற்றல் மற்றும் தலைவலி ஏற்பட்டு அகலும்.

தனுசு

தடைபட்ட காரியங்கள் படிப்படியாக நடந்தேறும். குடும்ப உறவுகளிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தொழில்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். வியாபாரிகள் வெளியூர் ஆர்டர்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பல்வேறு மன சங்கடங்களுடன் பணியாற்றும் சூழல் ஏற்படும். ரியல்எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளிவைக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் பொதுத்துறை பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். கலைதுறையினர் பல்வேறு தடைதாமதங்களுக்கு பிறகு வெற்றி பெறுவர். மீடியாவில் பணிபுரிபவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

மகரம்

புதிய முயற்சிகள் வெற்றிதரும் காலகட்டம் இது. குடும்பரீதியான சிக்கல்களுக்கு நல்ல தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள். தொழில்துறையினர் சற்று காலதாமதம் ஆனாலும் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். வியாபாரிகள் பழைய கடன்களை தீர்த்து விட்டு புதிய கடன்களை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயத்தை அடைவர். ஷேர்மார்க்கெட் பிரிவினர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய நபர்களை அதிகமாக நம்பிவிடக்கூடாது. மீடியாவில் பணிபுரிபவர்கள் இரவு, பகல் பாராமல் செயல்பட வேண்டும். வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் நீங்கும்.

கும்பம்

கடந்த கால சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்ப உறவுகளிடையே ஏற்படும் வாக்கு வாதங்களை கவனமாக கையாள வேண்டும். தொழில்துறையினர் பல்வேறு தடை தாமதங்களுக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் அடைவார்கள். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறைதொடர்பு கொண்டு பயன் பெறவேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மன உளைச்சலை அடைவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் இரும்பு மற்றும் எந்திர தயாரிப்பு நிறுவனங்கள் பங்குகள் மூலம் லாபம் பெறலாம். கலைதுறையினர் உழைப்புக்கு ஏற்ற ஆதாயத்தை பெறுவார்கள். மீடியாவில் பணிபுரிபவர்கள் உற்சாகமாகசெயல்படும் அளவுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.கால் முட்டிகளில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.

மீனம்

பலதடை தாமதங்களை கடந்து காரிய வெற்றியை பெறுவீர்கள். குடும்ப உறவுகளை அனுசரித்து செல்லவேண்டும். தொழில்துறையினர் தொழில்விரிவாக்கம் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிககவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் அரசாங்கம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை அடைவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் வண்டி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திறமையை வெளிக்காட்டவேண்டும். மீடியாவில் பணிபுரிபவர்கள் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து சமாளிக்கவேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மருத்துவ பராமரிப்பை கவனமாக மேற்கொள்ளவேண்டும்.





Next Story