இன்றைய ராசிபலன் - 18.01.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் தை மாதம் 5-ம் தேதி சனிக்கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை 04.19 வரை பூரம் பின்பு உத்திரம்
திதி: இன்று காலை 06.58 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம் காலை: 07.30 - 08.30
நல்ல நேரம் மாலை: 04.30 - 05.30
ராகு காலம் காலை: 09.00 - 10.30
எமகண்டம் மாலை: 01.30 - 03.00
குளிகை காலை: 06.00 - 07.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 09.30 - 10.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
ராசிபலன்:
மேஷம்
தம்பதிகளின் அன்பு மேலோங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகை உண்டு. சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்கள் உண்மையாக இருப்பர். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உதவுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
ரிஷபம்
பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். நண்பர்கள் உண்மையாக இருப்பர். கடன் தொல்லை தீரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிதுனம்
தேகம் பலம்பெறும். பெண்கள் செலவினை சமாளிப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். கணவன், மனைவி ஒற்றுமை காப்பர். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
திடீர் வெளியூர் பயணம் உண்டு. உடல் நலம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். மாணவர்கள் சாதனைபுரிவர். ஆவணங்களில் கவனம் தேவை. உத்யோகம் சாதகமாக இருக்கும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உடல் நிலை சீராகும். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். உறவினர்களிடம் வாதம் வேண்டாம். குல தெய்வ கோவில் செல்வீர்கள். இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
மாணவர்கள் திறன் கூடும். சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும். சேமிப்பில் கவனம் தேவை. உடல் வலி நீங்கும். அண்டை வீட்டார் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்
புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். பிரிந்தவர் ஒன்று சேருவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். எடுத்த காரியம் வெற்றியடையும். தன்னம்பிக்கை மிளிரும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
தனுசு
பெரியவர்களிடம் பணிவு தேவை. கணவரிடம் அனுசரிப்பது நல்லது. பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மகரம்
திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். அவரது உத்யோக உயர்வு மனமகிழ்வைத் தரும். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்