இன்றைய ராசிபலன் - 17.01.2025


இன்றைய ராசிபலன் - 17.01.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் தை மாதம் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 2.24 வரை மகம் பின்பு பூரம்

திதி: இன்று காலை 05.35 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: மரண,சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

ராசிபலன்:-

மேஷம்

மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கடுமையாக இருக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுகளை சமாளித்து ஓரளவு பணம் சேமிப்பர். கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருப்பர். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மிதுனம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கடகம்

மையப் பகுதியிலிருந்து வீண் செலவு, அலைச்சல், திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆனால் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

சிம்மம்

அரசு மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற இயலும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கன்னி

கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். நல்ல பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்

பெண்களின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் பெரிய விசயங்கள் முடியும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

விருச்சிகம்

விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். தம்பதிகளுக்கு எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

தனுசு

விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். தோல் வியாதிகள் வந்து போகும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கும்பம்

உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். புதிய பொறுப்புகள் தங்களை வந்தடையும். மாணவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் அன்றி அதிக மதிப்பெண்களை ஈட்டுவது அரிதாகும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மீனம்

தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். காதலர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்


Next Story