முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.;

Update:2025-08-14 11:26 IST

சென்னை,

பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள், தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தன.

அந்தவகையில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய தொழில் திட்டங்களுக்கு, தொழில் விரிவாக்கத்திற்கு அனுமதி, ஆணவப் படுகொலை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்