தூய்மைப் பணியாளர் நலனில் அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பினோர் கெடுவதில்லை என்று வீரமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திராவிடா் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் ஒப்பற்ற மனிதநேயர். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரிமையும், உறவும், மாறா அன்பும் கொண்டவர். தூய்மைப் பணியாளர் நலத்திலும், நல் வாழ்விலும் மிக்க ஈடுபாடு கொண்ட முதல்-அமைச்சர். அமைச்சரவை முடிவுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு 6 முக்கியமான கல்வி, காப்பீடு, சுயதொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வகைத் திட்டங்களை அறிவித்துள்ளார். அடக்குமுறை மூலம் ஆள நினைப்பவர் அல்ல.
அவர் உளப்பூர்வமாக, கொள்கைப்பூர்வமாக ஒடுக்கப்பட்டோர், உதவவேண்டிய அடித்தட்டு மக்களின் நல வாழ்வில் அக்கறை கொண்டவர். அவரது உறுதிமொழிகளை ஏற்று உங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிடுங்கள். உங்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் என்றும் உங்கள் நலன் மீது அக்கறை உள்ள இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பினோர் கெடுவதில்லை.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.