எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்: அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது;
சென்னை,
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் அமலாக்கத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, சீனிவாசனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.