திருச்செந்தூர் : கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு
திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.;
தூத்துக்குடி ,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனைக்கண்ட கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.