அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வருகை

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்துகிறார்.;

Update:2025-08-16 16:16 IST

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று இரவு 9.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மதியம் 12 மணிக்கு வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தரவுகள் மூலம் விளக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, மதியம் 12.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழுவினரையும், மதியம் 3 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும், மாலை 4 மணிக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளையும், மாலை 4.45 மணிக்கு சமூக ஊடகத் துறை நிர்வாகிகளையும் கிரிஷ் சோடங்கர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

18-ந் தேதி (திங்கட்கிழமை) புதுச்சேரி செல்லும் கிரிஷ் சோடங்கர், காலை 11 மணிக்கு மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், பிற்படுத்தப்பட்ட துறை நிர்வாகிகள், சமூக ஊடக துறை நிர்வாகிகள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

மறுநாள் (19-ந் தேதி) காலை சென்னை வரும் கிரிஷ் சோடங்கர், மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் அவர், பல்வேறு துறையினரையும் சந்தித்து விட்டு அன்று இரவே டெல்லி திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்