உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
இந்நிலையில், உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அவர் தூத்துக்குடி, கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.