வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே 3 முறை இயங்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.;

Update:2025-07-27 07:19 IST

கோப்புப்படம்

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே 3 முறை இயங்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07361) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27, செப்டம்பர் 1, 6-ந்தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு 29, 3, 8-ந்தேதிகளில் காலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரெயில் (07362) அடுத்த மாதம் 29-ந்தேதி, செப்டம்பர் 3, 8-ந்தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு 31, 5, 10-ந்தேதிகளில் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் மடகான், சன்வோர்டம், குலேம், காஸ்டல் ராக், லோண்டா, தார்வார், எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே, சிக்கஜாஜூர், பீரூர், அரிசிகெரே, துமகூரு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கே.ஆர்.புரம் பங்காருபேட்டை, மொரப்பூர், பொம்மிடி, சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்