சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் - 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரில் இருவர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-27 20:12 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் 4 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.17 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்