கட்சி, குடும்பத்தில் இருந்து லாலு பிரசாத் ஒதுக்கியதால் சுயேச்சையாக போட்டியிட தேஜ் பிரதாப் முடிவு

தேஜ் பிரதாப் யாதவ் தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.;

Update:2025-07-27 22:50 IST

பாட்னா,

பீகார் மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகனும், முன்னாள் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ் வர உள்ள சட்டசபை தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மகுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாகவும், எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அடுத்த முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.

தேஜ் பிரதாப் யாதவ் தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அனுஷ்கா என்ற பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக சமூக ஊடகங்களில் அவர் பதிவு வெளியிட்டதை தொடர்ந்து தேஜ் பிரதாப் யாதவை கடந்த மே மாதம் அவரது தந்தை லாலு பிரசாத் 6 ஆண்டுகளுக்கு கட்சி, குடும்பத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்