நேரு, இந்திரா மீது பழிபோடுவது பாஜகவின் வாடிக்கை: ஆ.ராசா எம்.பி
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்க கேடு என்று ஆ.ராசா எம்.பி கூறினார்.;
புதுடெல்லி,
பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று பிற்பகல் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மக்களவையில் உரையாற்றினர்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்தனர். இன்று இரண்டாவது நாளாக விவாதம் நீடித்தது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது திமுக எம்.பி ஆராசா பேசினார்.ஆ.ராசா பேசியதாவது:எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர். 370 பிரிவு ரத்துக்கு பிறகு காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் இருக்காது எனக்கூறினர். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்க கேடு. குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளையாவது நீங்கள் (பாஜக அரசு) பின்பற்றுங்கள்" என்று பேசினார்.