பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்: தேர்தல் ஆணையம்

பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது;

Update:2025-07-31 19:36 IST

புதுடெல்லி, 

"வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நாளை வெளியிடப்பட உள்ளது. பீகாரில் உள்ள 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் சம்மந்தப்பட்ட தரப்புக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.

தேர்தல் அதிகாரிகளிடம் எந்த ஒரு வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியோ நாளை முதல் செப்டம்பர் 1 வரை காணாமல் போன தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் கமிஷன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்