சிக்கிம், மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;

Update:2025-08-01 21:00 IST

காங்டாக்,

சிக்கிமில் உள்ள காங்டாக் பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.38 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.74 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம்:-

மேற்கு வங்காளத்தில் உள்ள கலிம்போங் பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.16 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்