விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசியது மகத்தான தருணம் - சுபான்ஷு சுக்லா

நாடு முழுவதிலும் இருந்து கிடைத்த அன்பும் ஆதரவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.;

Update:2025-08-02 01:49 IST

புதுடெல்லி,

சர்வதேச விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நேற்று காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், 'விண்வெளி பயணத்தில் எனக்கு மகத்துவமான தருணமாக அமைந்தது, இந்திய பிரதமரிடம் விண்வெளியில் இருந்து தேசியக் கொடியின் பின்னணியில் நின்று கொண்டு பேசியதுதான். அந்த தருணம் இந்தியா ஒரு பார்வையாளராக அல்ல, சம பங்கேற்பாளராக உரையாடலில் மீண்டும் நுழைவதைக் குறிக்கிறது' எனக்கூறினார்.

மேலும் அவர், '41 அண்டுகளுக்குப்பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்கு திரும்பி இருக்கிறார். இந்த முறை ஒரு தனிமையான பாய்ச்சல் அல்ல, இந்தியாவின் இரண்டாவது சுற்றுப்பாதையின் தொடக்கமாகும். இந்த முறை, நாங்கள் பறக்க மட்டுமல்ல, வழிநடத்தவும் தயாராக இருக்கிறோம். நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த அன்பும் ஆதரவும் என்னை மிகவும் கவர்ந்தது' என்றும் சுக்லா கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்