கடவுள் சிவபெருமான் ஆசியுடன் பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தேன்; பிரதமர் மோடி

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.;

Update:2025-08-02 13:40 IST

காந்தி நகர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விகிதம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

மேலும், உத்தரபிரதேசத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் எனது இதயத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது. நமது மகள்களின் குங்குமத்தை இழக்கச்செய்தவர்களை பழிதீர்க்க நான் உறுதியளித்தேன். கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன். நாட்டு மக்கள் 140 கோடி பேரின் ஒற்றுமையே ஆபரேஷன் சிந்தூரின் வலிமையாக மாறியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்