'இந்திய பொருளாதாரம் குறித்து பேசியது ராகுல் காந்தியின் சொந்த கருத்து' - சசி தரூர்

இந்தியாவிற்கு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-02 19:40 IST

புதுடெல்லி,

இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது சரிதான் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி கூறியது அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்தி கூறியது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர் அப்படி பேசியது அவரது சொந்த கருத்து. அமெரிக்கா உடனான நமது உறவு, ஒரு மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மையாக, நமக்கு மிகவும் முக்கியமானது. சுமார் 90 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதை இழக்கவோ அல்லது கணிசமாக குறைக்கவோ நம்மால் முடியாது.

இந்தியாவிற்கு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் நாம் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். நமது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மற்ற நாடுகளுடனும் நாம் பேச வேண்டும். அதன் மூலம் அமெரிக்காவில் நாம் இழக்கக்கூடிய சிலவற்றை நம்மால் ஈடுசெய்ய முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்