ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா?

இந்தியா, ரஷிய பொருளாதாரங்கள் இறந்த பொருளாதாரங்கள் என்றும் டிரம்ப் விமர்சித்தார்.;

Update:2025-08-02 17:18 IST

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார்.இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாத நிலையில் இந்தியா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வாங்கி வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு அபராத வரியும் விதிக்கப்படும் என்று தெரி வித்தார்.

மேலும் இந்தியா, ரஷிய பொருளாதாரங்கள் இறந்த பொருளாதாரங்கள் என்றும் டிரம்ப் விமர்சித்தார். இதற்கிடையே ரஷியாவி டம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, நாட்டின் எரிசக்தி கொள்முதல்கள் சந்தை மற்றும் தேசியநலன்களால் இயக்கப்படுகின்றன. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷிய இறக்குமதியை நிறுத்தியதாக எந்த தகவலும் இல்லை. இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்