ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது: ராகுல் காந்தி

நான் ஒரு போதும் ராஜா இல்லை. ராஜா ஆக வேண்டும் என்ற விருப்பம் துளியும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update:2025-08-02 15:25 IST

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்று  கூறியுள்ளார். புது டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தொடங்கிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினர்.

அப்போது தனது உரையைத் தொடங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள், இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும் என்று  குரல் எழுப்பினார். அப்போது, ராகுல் காந்தி பதிலளித்ததாவது: -

நான் ஒரு போதும் ராஜா இல்லை. ராஜா ஆக வேண்டும் என்ற விருப்பம் துளியும் இல்லை. ராஜா என்ற முறைக்கு நான் எதிரானவன். ராஜா என்ற முறையை நான் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன்"என்று பேசினார். முன்னதாக ராகுல் காந்தி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியை சாடினார். அப்போது ராகுல் காந்தி, இந்த நாட்டின் ராஜா போல செயல்படுவதாகவும், மக்களின் குரல்களைக் கேட்பதில்லை என்றும் விமர்சித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்