மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா? மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ளார்;
புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சபையின் மையப்பகுதிக்கு வரும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.