விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி: பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்

விவசாயிகளுக்காக, ‘பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.;

Update:2025-08-01 16:43 IST

புதுடெல்லி,

பா.ஜனதா அரசாங்கத்தால் 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கான, 'பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 செலுத்தப்படுகிறது. தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகிறது.

தற்போது இந்ததிட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 19 தவணைகளில் ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் 20-வது தவணை, 2-ம் தேதி (நாளை) விடுவிக்கப்படுகிறது. இந்த தவணையில் சுமார் ரூ.20 ஆயிரத்து 500 கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் 9.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள விழாவில் இந்த நிதியை பிரதமர் விடுவிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்