சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளின் தாய்; மக்களின் தொடர்பு மொழியாக மாற வேண்டும் - மோகன் பகவத்

சமஸ்கிருத மொழி நமது உணர்வுகளை செழுமையாக்கும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-01 21:24 IST

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டும் என்றால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத மொழியை பயன்படுத்த வேண்டும். மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும்

அனைவரும் சமஸ்கிருத மொழியை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன், ஆனால் என்னால் அதை சரளமாக பேச முடியவில்லை. சமஸ்கிருத மொழியை பாதுகாப்பதும், அதை வளர்ச்சியடைய செய்வதும் நமது பொறுப்பாகும். சமஸ்கிருதம் நமது உணர்வுகளை செழுமையாக்கும். அந்த பழமை வாய்ந்த மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்