பார்வையிழந்து அவதிப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு
பார்வையிழந்து அவதிப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.;
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் காஞ்சிக்கோடு வலியேறி பகுதியில் பாலக்காடு டஸ்கர்-5 என்று அழைக்கப்படும் காட்டு யானை புகுந்து நடமாடியது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானை நடமாட்டத்தை கண்காணித்தனர்.
அப்போது காட்டு யானையின் நெற்றி, கால்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு யானைக்கு பார்வை குறைபாடு உள்ளதால், பல இடங்களில் சுவரில் மோதி காயமடைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் கண்களில் இருந்து நீர் வடிவதோடு, நடக்க சிரமப்படுகிறது.
தற்போது அந்த யானை கோங்காட்டுப்பாடு வனப்பகுதியில் உள்ளது என்றும், கடும் வலியால் அவதிப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இதற்காக சிறப்பு குழு இன்று வந்தது. ஏற்கனவே காட்டு யானை ஒரு கண்ணில் பார்வையிழந்து இருந்தது. தற்போது மற்றொரு கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.