பணமோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அனில் அம்பானி செயல்பட்டு வருகிறார்;

Update:2025-08-01 13:29 IST

டெல்லி,

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அனில் அம்பானி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த 24ம் தேதி ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், ரிலையன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி மீதும் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் 5ம் தேதி விசாரணைக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்