ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.40 கோடி கஞ்சாவுடன் பெண் கைது

சோதனையில் 2 பைகளில் 400 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.;

Update:2025-07-31 20:30 IST

ஐதராபாத்,

தெலுங்கான மாநிலம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பாங்காக்கில் இருந்து துபாய் வழியாக வந்த விமானத்தில் ஒரு பெண் பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் அந்த பெண்ணின் 2 பைகளில் 400 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ₹40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.பாங்காக்கிலிருந்து நேரடியாக வரும் இந்திய விமான பயணிகளிடம் அதிக சோதனை நடப்பதால் அந்தப் பெண் பாங்காக்கிலிருந்து கஞ்சாவை துபாய் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. தாய்லாந்திலும், இந்தியாவிலும் அந்த பெண்ணுக்கு கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்புகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்