போலீஸ் தேர்வின்போது இளம்பெண் மயக்கம்; மருத்துவமனை செல்லும் வழியில் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-07-26 21:42 IST

பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைதானத்தில் கடந்த 24-ந்தேதி போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், ஓட்டப்பந்தயத்தின்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் வினய் குமார் மற்றும் உதவியாளர் அஜித் குமார் ஆகியோர், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வினய் குமார் மற்றும் அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என எஸ்.எஸ்.பி. ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்