திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம்.. மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி
மாணவி கர்ப்பமான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
குளச்சல்,
நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29), கூலி தொழிலாளி. இவர் 65 வயது மூதாட்டிக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார்.
மூதாட்டியின் வீட்டில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி இருந்தார். மூதாட்டிக்கு பேத்தி முறை ஆவார். அந்த சமயத்தில் சிறுமிக்கும், தொழிலாளி விஷ்ணுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் மாணவி வயிறு வலிப்பதாக பாட்டியிடம் கூறியுள்ளார். இதையடுத்து பேத்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு விசாரித்த போது, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 3 நாட்கள் விஷ்ணு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். அதன்பேரில் விஷ்ணு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அறிந்ததும் விஷ்ணு தலைமறைவானார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.