மின்சார ரெயிலில் பயணித்த பெண்ணை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி, பெண் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை வாலிபர் பறித்தார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்கொளத்தூர்தூர் பகுதியை சேர்ந்தவர் திலகம் (வயது 47). இவர் இன்று காலை செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு மின்சார ரெயிலில் பயணம் செய்தார். தக்கோலம் மேல் பக்கம் இடையே உள்ள ஏரிக்கரையில் சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டது. மின்சார ரெயிலில் கூட்டம் இல்லை. திலகம் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி நகையை கழட்டித் தருமாறு பெண்ணை மிரட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்தர திலகம் அலறி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் கையால் அவருடைய முகத்தில் தாக்கினார். இதில் பலத்த கயம் ஏற்பட்டு முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி திலகம் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை வாலிபர் பறித்தார்.
உடனே அவர் ரெயிலில் இருந்து குறித்து அங்குள்ள ஏரிக்கரையில் தப்பி ஓடினார். அதற்குள் சத்தம் கேட்டு ரெயிலில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கீழே இறங்கினர். நகையுடன் வாலிபர் வருவதை கண்ட அவர்கள் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் வாலிபர் ஓடி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகையுடன் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.