அப்துல் கலாம் நினைவு நாளில், அவரது புகழை போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.;
சென்னை,
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் அப்துல் கலாமின் புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலகம் போற்றும் மாமனிதராக உயர்ந்து, தன் அக்னிச் சிறகுகளால் பல உயரங்கள் தொட்டு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் புகழைத் தேடித்தந்த முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.