கோவில்பட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

விவசாயி ஒருவர் கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தார்.;

Update:2025-07-27 17:26 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வெங்கடேஸ்வரபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (வயது 44). விவசாயியான இவர் கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கோவில்பட்டி-குருமலை சாலையில் வெங்கடேஸ்வரபுரத்தை அடுத்த தனியார் ஆட்டுப் பண்ணை அருகே சென்ற போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்