தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பெண், பாலியல் வன்கொடுமை செய்த ஆண் ஆகிய 2 பேருக்கு முறையே 5 மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-14 16:14 IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (வயது 25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தும், அதே சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் தங்கதுரை(41) என்பவர் பாலியல் வன்கொடுமையும் செய்த வழக்கில் மேற்சொன்ன 2 பேரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று முன்தினம் குற்றவாளி கவிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5,000 அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ஜேசுராஜ்குமார் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்