தூத்துக்குடி: அண்ணன்-தம்பி கொலையில் 5 பேர் கும்பல் கைது - பரபரப்பு வாக்குமூலம்

2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.;

Update:2025-08-02 21:21 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1 பண்டுகரை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன்கள் மாரிப்பாண்டி (வயது 35), அருள்ராஜ்(30). இவர்கள் 2 பேரும் சமீபத்தில் மாயமாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வ.உ.சி. துறைமுக சாலையில் தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் மாரிபாண்டியனின் உறவினரான கோவில்பிள்ளை நகரை சேர்ந்த ரிதன்(25) என்பவரின் சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார். இதையடுத்து கடந்த 28-ந்தேதி ரிதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உள்ளிட்டோர் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருள்ராஜ் ஆகிய இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி உப்பாற்று ஓடைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு வைத்து 2 பேரையும் சரமாரி தாக்கியதில் அவர்கள் இறந்தனர். தொடர்ந்து அவர்கள் உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கூடுதலாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்