சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்டிரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் நேற்று கேட்பாரற்று பெட்டி கிடந்தது.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில்,28 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.