உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்கு: ஜெயக்குமார் பேட்டி

என் உடலில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.;

Update:2025-08-03 12:25 IST

சென்னை,

சென்னை திருவான்மியூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். என்னை குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர்களுக்கு நிறைய வருமானம் வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். நடக்காத ஒருவிஷயம்.. எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றம் தரும் விஷயம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்பது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கமாட்டேன்.

திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்.. பெரியார் வழியில்... அண்ணா வழியில்... அண்ணாவிற்கு பிறகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்த நான் அவ்வாறு இருக்கமாட்டேன். என் உடலில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்கு. இதுதான் எங்களுடைய கொள்கை.

ஓபிஎஸ் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பொதுச்செயலாளரே விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவே போதுமானது. ஒன்றிணைவோம் வா திட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ. மகாராஜனையே இணைக்க முடியவில்லை; இவர்கள் (திமுக) எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்