ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு தனிப்பட்ட முறையில் தனக்கு வருத்தமளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-03 12:58 IST

சென்னை,

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது அதிர்ச்சியளிக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாஜக கூட்டணியிலும், அக்கட்சியின் தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்தார். அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக் கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தனது முடிவை ஓ.பன்னீர்செல்வம் மாற்றிக்கொள்ள வேண்டும். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர பாஜகவினர் முயற்சிக்க வேண்டும். மத்திய மந்திரி அமித் ஷா தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்