திருப்பத்தூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.;
கோப்புப்படம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் சுப்புராயன் கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு, அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
இதையறிந்து அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியிடம் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.