குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழா: கும்பம் திருவீதி உலா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-08-05 16:48 IST

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று (ஆகஸ்ட் 4) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் துவங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாளை காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்